E   |   සි   |  

2021 ஏப்ரல் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : தவிசாளர் குழாமில் சேவையாற்றுவதற்கான பிரதியீட்டு உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் வருடாந்த அறிக்கை.   
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக  2021 சனவரி 01 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக கலாநிதி சமிந்தலால் சுஜிவ லேவன் கமமே அவர்களை  நியமித்தல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 31 ஆம் திகதிய 2208/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நிதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பதிலாக கௌரவ செஹான் சேமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ உதய கம்மன்பில
(ii)    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1623 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks