E   |   සි   |  

2021 ஏப்ரல் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ. அவர்களின் ஆசனம் வறிதாதல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான  தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii)    2012 ஆம் ஆண்டுக்கான தேயிலை சக்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை.
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்

(iv)    திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 8 மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் ஒட்டுத்துண்டு மற்றும் ஒட்டுத்துண்டு முகாமை முறைமை தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 01 ஆந் திகதிய 2208/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 01/2021)
(v)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த மதுபான உரிமக் கட்டணங்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 01 ஆந் திகதிய 2208/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 02/2021)
(vi)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 22(1) ஆம் பிரிவின் கீழ் போத்தலில் அடைக்கப்பட்ட மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 07 ஆந் திகதிய 2209/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2021)
(vii)    திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 07 ஆந் திகதிய 2209/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2021)
(viii)    திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 4 மற்றும் 12 ஆம் பிரிவுகளின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 07 ஆந் திகதிய 2209/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 05/2021)
(ix)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ்  மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 11 ஆந் திகதிய 2210/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 06/2021)
(x)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2213/34 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2213/35 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2213/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2213/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 5, 7 மற்றும் 8 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2213/38 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 11 ஆம் திகதிய 2214/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிரசன்ன ரணதுங்க        -    ஐந்து மனுக்கள்                                        
(ii)    கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

மாகம - கிரிந்த மணல் கருத்திட்டம்

மேற்சொன்ன வினாவிற்கு சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்தைத் திருத்தவதற்காக

“தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks