E   |   සි   |  

2020 நவம்பர் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆண்டறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i) ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினொராம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கரும்பு வேளாண்மைக்கான உத்தரவாத விலை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் புஷ்பகுமார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 01ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks