பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 112 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2019 ஏப்ரல் 08 ஆம் திகதிய 2118/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் முன்மொழிவு பற்றிய பிழையான ஊடக அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக
“தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“கொவிட் - 19 தொற்றுநோய் பரவுவதால் நாட்டில் நிலவும் ஆபத்தான நிலைமை” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நலீன் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1340 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1340 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks