E   |   සි   |  

2020 ஒக்டோபர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் (ஆதரவாக 87; எதிராக 17), பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது -

அரசாங்க நிதி பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 (1) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர், அக்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக் குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுதல் வேண்டும்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“கொவிட் - 19 தொற்று” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630  மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks