E   |   සි   |  

2020 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B: சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பானது


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2014 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும்;    
•    2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் X ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XX, XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும்;    
•    2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVII, XVIII, XIX, XX, XXI, XXII மற்றும் XXIII பகுதிகளையும் நான்காவது தொகுதியின் III, IV, V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும், ஆறாவது தொகுதியின் IX, X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும் மற்றும் பத்தாவது தொகுதியின் XIV, XVI, XVII, XVIII மற்றும் XIX ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை

(ii)    2018 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(iii)    2018.03.01 முதல் 2018.10.26 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் 2019.10.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாஸ

ஊனமுற்றோர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் நிலவும் ஊழல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(ii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு தீர்மானங்கள்
(iii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள்
(v)    சேர் பெறுமதி வரி சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முன்னைய அரசாங்கத்தால் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்திற்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆனந்த அலுத்கமகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1902 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks