பார்க்க

E   |   සි   |  

2019 நவம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017/18 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கன் எயார்லையின்ஸின் ஆண்டறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் கம்பனியின் ஆண்டறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை

(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் கேகாலை, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலகங்களின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ புத்திக பத்திறண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i)    விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல் சட்டமூலம்
(ii)    தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலம் - திருத்தங்களுடன்


அதனையடுத்து, 1355 மணியளவில் பாராளுமன்றமானது 2019 டிசம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks