பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான மேர்ச்சன்ட் பேன்க் ஒப் ஸ்ரீ லங்கா அன்ட் பினேன்ஸ் பீஎல்சீயின் வருடாந்த அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களுக்குப் பதிலாக கௌரவ ஹேஷா விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணை
பாராளுமன்ற உறுப்பினர், காலஞ் சென்ற கௌரவ சாலிந்த திசாநாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மேற்பார்வை சேவையில் நியமிக்கப்பட்ட அதிபர்களை நிரந்தர முதன்மை சேவைக்கு உள்வாங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1707 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks