E   |   සි   |  

2019 மார்ச் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ அசோக் அபேசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன    -          மூன்று மனுக்கள்         
(ii)     கௌரவ டக்ளஸ் தேவானந்தா                                      
(iii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே    -          இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் - குழு நிலை விவாதம்

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2016 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“காடழிப்பினை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 26ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks