பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுஜீவ சேனசிங்க
(ii) கௌரவ பிமல் ரத்நாயக்க - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, தெங்கு அபிவிருத்திச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“தெங்கு அபிவிருத்தி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள், தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை - 2014
(ii) தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை - 2013
(iii) தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை - 2013
(iv) தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை - 2014
(v) கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2014
(vi) கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2013
(vii) இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2014
(viii) ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை - 2015
அதனையடுத்து, 1849 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 21ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks