பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2017 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அறிக்கை
மேற்சொன்ன வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்
(ii) ஆட்களையும் ஆதனங்களையும் மற்றும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தோட்ட வீதிகளை மீள வகைப்படுத்தல் மற்றும் பராமரித்தல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 15ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks