பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : போதைப்பொருட்களை பாவணை செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் தொடர்பாக கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களின் கூற்று தொடர்பானது
‘B’ : 2019 மார்ச் 07ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிய பாதுகாப்பு தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் (2018.07.01 - 2018.09.30) காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குக் கூற்று
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடத்தில் இரசாயன விஞ்ஞானங்கள் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 திசம்பர் 05 ஆம் திகதிய 2100/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை (2017.06.06 முதல் 2017.12.08 வரை) அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார
(ii) கௌரவ நிமல் லான்சா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
நெல் அறுவடை
மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவைகள் மற்றும் தபால் ஊழியர்களின் குறைபாடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ அப்துல் ஹலீம் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசியலமைப்பு பேரவை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ உதய பிரபாத் கம்மன்பில அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2030 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks