E   |   සි   |  

2019 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்

•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகளையும், பத்தாவது தொகுதியின் XXXI ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iv)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பான தீர்மானம்
(2018 யூலை 10 ஆம் திகதிய 2079/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )
(v)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பான தீர்மானம்
(2018 ஒக்டோபர் 08 ஆம் திகதிய 2092/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்     பத்திரிகை )
(vi)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக்     கட்டணங்கள் தொடர்பான தீர்மானம்
(2018 நவம்பர்  15 ஆம் திகதிய 2097/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே                    
(ii)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும                    -      ஐந்து மனுக்கள்
(iii)    கௌரவ மஹிந்த அமரவீர                    
(iv)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ                     -      இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(ii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(iii)    கௌரவ  இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iv)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிரோஷன் பெரேரா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் புற்றுநோய் பராமரிப்பு நம்பிக்கை நிதியம் (கூட்டிணைத்தல்) எனும் சட்டமூலம் சபையின் அனுமதியுடன் கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் மீளபெறப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    தவறாளர்களை ஒப்படைத்தல்  சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முஸ்லிம் தீவிரவாதக் குழுவிற்கு எதிரான நடவடிக்கை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 07 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks