E   |   සි   |  

2019 பெப்ரவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2018 ஜூன் 5ஆம் திகதி இடம்பெற்ற பிரதிச் சபாநாயகர் தெரிவின் போது பயன்படுத்திய வாக்குச் சீட்டுக்களை அழித்தல் தொடர்பானது
‘B’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘C’ :  பொது மனுக்கள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
‘D’ :  பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்-

•    பாதுகாப்பு
•    மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் (2018.07.01 -2018.09.30) காலாண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (2018.07.01-2018.09.30) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;  மற்றும்
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55(5) உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2018.04.01-2018.06.30) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டின் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.08.16 முதல் 2018.11.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்புகள்
(iii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 யூலை 11 ஆம் திகதிய 2079/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்,  முத்திரைத் தீர்வை  தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 01 ஆம் திகதிய 2091/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்,  முத்திரைத் தீர்வை  தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 டிசெம்பர் 31 ஆம் திகதிய 2104/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vi)    2016 ஆம் ஆண்டின் புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை

(vii)    தேசிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளர்ப்புக் கொள்கை

(viii)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 17 ஆம் திகதிய 2093/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ix)    2016 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண                        -         ஐந்து மனுக்கள்
(ii)    கௌரவ காமினி லொக்குகே                    
(iii)    கௌரவ விஜித ஹேரத்                         -         நான்கு மனுக்கள்
(iv)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                  -         இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ நிஹால் கலப்பத்தி                   -         இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ டி.வீ. சானக

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை அகற்றல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    பாராளுமன்ற அலுவல்கள்

38 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையிலுள்ள “தலா இரண்டு கேள்விகள் வீதம் அரசாங்கதிற்கும் எதிர்க்கட்சிக்கும்” எனும் சொற்றொடருக்குப் பதிலாக “அரசாங்கத்திற்கு ஒரு கேள்வியும் எதிர்க்கட்சிக்கு மூன்று கேள்விகளும்” எனும் சொற்றொடரை இடுவதன் மூலம் இந்நிலையியற் கட்டளை நிகழும் கூட்டத்தொடரின் போது தொழிற்படுமாக

(ii)    பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

115 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2019 சனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், 2019 சனவரி 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக்  கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பத்தொன்பது (19) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக

(iii)    அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

112 (1) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் 2019 சனவரி 25 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முப்பத்தொரு (31) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு மேலதிகமாக பின்வரும் ஐந்து (05) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-

1.    தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2.    விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3.    பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொதுவழங்கல் பற்றிய அமைச்சுசார்     ஆலோசனைக் குழு
4.    டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5.    விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உாிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக

ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்


ஒத்திவைப்புப் பிரேரணை

“பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 06 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks