பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 2018.08.09 ஆம் திகதியன்று “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தம்)” தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குழுநிலையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை
‘B’ : எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான தீர்ப்பு
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த அறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2016 ஆம் ஆண்டின் பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் இறுதியாகத் திருத்தப்பட்ட, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தின் 5(15) ஆம் பிரிவின் கீழ் சேர்பெறுமதி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 யூலை 02 ஆம் திகதிய 2078/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 05 ஆம் திகதிய 2074/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் சேஜஸ் கம்பஸ் (பிறைவெட்) லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 11 ஆம் திகதிய 2079/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) பாடசாலை மாணவர் ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை முறைசார்ந்த வகையில் மேற்கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை தயாரித்து அமுலாக்குதல்
ஒருசில பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளின்போது முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் மாணவர்களை பாடசாலைகளிலிருந்து நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதன்மூலமாக மேற்படி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் சீரழிந்து பாரிய அநீதிக்கு இலக்காகின்றமையும், பெரும்பாலான மாணவர்கள் கடுமையாக உளரீதியான அழுத்தத்துக்கு உள்ளாகி மனநோயாளிகளாக மாறுகின்றமையும், ஒருசில மாணவர்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தைப் போன்றே சமூகத்தையும் வெறுத்து சமூக விரோத குற்றவாளிகளாக மாறிய சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக உள்ளமையால், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு முரணான செயல்களின்போது மிகவும் முறைசார்ந்த வகையிலும் பாரபட்சமற்றதாகவும் ஒழுக்காற்று விசாரணைகளை நடாத்துவதற்காக பொருத்தமான வேலைத்திட்டமொன்றை தயாரித்து அமுலாக்க வேண்டுமென இப்பாராளுன்றம் பிரேரிக்கின்றது.
(ii) பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக பயன்படுத்தி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரச மருத்துவ பீடமொன்றை ஆரம்பித்தல்
எமது நாட்டில் சிறந்த சுகாதார சேவையொன்றினைப் பேணிவரும்பொருட்டு அவசியமாகின்ற மருத்துவர்களின் எண்ணிக்கையில் தற்போது ஏறக்குறைய 50% மாத்திரமே இருப்பதோடு க.பொ.த. (உயர் தரம்) உயிரியல் பாடத்துறையில் அதியுயர் சித்திகளைப் பெற்றுக்கொள்கின்ற பெரும்பாலான மாணவர்களுக்கு அரசாங்க மருத்துவ பீடங்களில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளதோடு அரசாங்கத்தின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலை ஒன்றாக பயன்படுத்தி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுன்றம் பிரேரிக்கின்றது.
(iii) பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக கிரிக்கெட் போட்டித் தொடர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அமைத்தல்
கடந்த பல வருடங்களாக இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வீழ்ச்சிக்குள்ளாகி இருப்பதனால் தேசிய அணிக்கு திறமைவாய்ந்த வீரர்களைத் தேடிக்கொள்வதற்காக பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக மட்டத்தில் கிரிக்கெட் போட்டித் தொடர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.
(iv) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தற்போது காணப்படுகின்ற பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு இருப்பிலுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தல்
பல்கலைக்கழகங்களில் அல்லது அதற்கு வெளியே புதிய மாணவர்களுக்கு எதிர்கொள்ள நேரிட்டுள்ள பகிடிவதையை முற்றாக தடுப்பதற்கு மற்றும் 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகளையும் ஏனைய இயல்பிலான கொடூரச் செயல்களையும் தடை செய்வதற்கான சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு பகிடிவதைகளில் ஈடுபடுகின்ற சகல தரப்புகள் தொடர்பிலும் சட்டம் அமுலாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.
(v) புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
புத்தளம் மாவட்டம் அதிரம்யமான கரையோரப் பகுதிக்கு உரிமைகோரிய போதிலும், கடலரிப்பு, கண்டல் தாவரங்கள் அழிவடைதல், அத்துமீறிய நிர்மாணிப்புகள் போன்ற காரணங்களினால் கரையோரப்பகுதி மாசடைந்துள்ளதால், புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியை பாதுகாப்பதற்காக துரித நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கட்டார், தோஹாவில் அமைந்துள்ள ஸ்டபோர்ட் இலங்கையர் பாடசாலையில் நிலவும் பிரச்சினைகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசோக்க பிரியந்த அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1512 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 23ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks