பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான (2018.01.01 - 2018.03.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்று அறிக்கை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 19 ஆம் திகதிய 2076/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ மாவை. சோ. சேனாதிராசா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கருணாரத்ன பரணவிதான அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளருக்குப் பதிலாக கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
ஊடகங்களுக்கான அச்சுறுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முல்லைதீவு பிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டம்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ அப்துல் ஹலீம் அவர்கள் ஹஜ் யாத்திரை தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள், தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2018 யூன் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மாகாண சபை தேர்தல்கள் மற்றும் தேர்தல் முறைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks