E   |   සි   |  

2018 ஜூன் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(x)    2017 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் செயற்பாட்டு மற்றும் கணக்கு அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(xii)    2017 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் பெறுபேற்று அறிக்கையும் கணக்கும்
(xiii)    2017 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
(xiv)    2017 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(xv)    2015 ஆம் ஆண்டுக்கான காலி மரபுரிமை மன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜோன் அமரதுங்க            -                    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ காமினி லொக்குகே           -                    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ ரவி கருணாநாயக்க                    
(iv)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே       -                    நான்கு மனுக்கள்
(v)    கௌரவ புத்திக பத்திறண              -                    ஒன்பது மனுக்கள்
(vi)    கௌரவ சந்திம கமகே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ புத்திக பத்திறண
(ii)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
(iii)    கௌரவ  அநுர திசாநாயக்க
(iv)    கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    மகப்பேற்று நன்மைகள் (திருத்தச்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தர்ம பாடசாலைக் கல்வியை வலுவூட்டல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks