பார்க்க

E   |   සි   |  

2017 நவம்பர் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து  மற்றும் தொலைத்  தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல       -      இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலைப் பிற்போடல் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் தொடர்பாக 2017.09.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(ii)    வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற்சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்-2012/2013
(v)    வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்-2013/2014
(vi)    இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2012
(vii)    இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013
(viii)    இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2014


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சூரியவெவ-மீகஹஜுன்தர பாதை விரிவாக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 29ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks