E   |   සි   |  

2017 ஜூலை 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) வலுவாதார அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் சார்பாக கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                   
(ii) கௌரவ விமலவீர திசாநாயக்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு “லைலா உம்மா தீன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “அப்துல் மஜீத் எக்கடமி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள்  (i) மற்றும் (ii) முறையே சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“யாழ் குடாநாட்டில் பொருத்து வீட்டுத் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks