பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான உள்ளக அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஏ. எச். எம். பெளஸி
(ii) கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன் - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே
(iv) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(v) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
(vi) கௌரவ தினேஷ் குணவர்தன
(vii) கௌரவ நிஹால் கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ பிமல் ரத்நாயக்க
(ix) கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
காணி உரிமம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) தனது அமைச்சுப் பதவி தொடர்பாக லங்காதீப பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரை சம்பந்தமாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.
(ii) திருகோணமலையிலுள்ள கரடிபூவல் கிராம மக்கள் முகங்கொடுக்கும் அடிப்படை வசதிகளிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2017.02.08 அன்று மற்றும் யுத்தத்தினால் குடிபெயர்ந்து வாழும் மக்களை உயிலம்குளத்தில் மீள்குடியமர்த்துதல் தொடர்பாக 2017.05.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர், கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்காக
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் சமர்ப்பித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மொனராகலை மற்றும் பிபிலையிலுள்ள காணிகளை தனியார் கம்பனிக்கு வழங்கல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1744 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks