பார்க்க

E   |   සි   |  

2017 மே 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 20112012 மற்றும் 2013 ஆம்  ஆண்டுகளுக்கான இலங்கை இராணுவத் தரைப்படை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2014 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி
(v) 2014 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான லங்கா லேலண்ட் லிமிடட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) உற்பத்திகளும் சேவைகளும்  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்கள் சார்பாக கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                       -      நான்கு மனுக்கள்
(ii) கௌரவ புத்திக பத்திறண                               -      முப்பத்து எட்டு மனுக்கள்
(iii) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் தரம் 2-II இலிருந்து 2-I இற்கு பதவி உயர்வு வழங்கலில் தமிழ் ஆசிரியர்களை கவனத்திற் கொள்ளாமை தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


அதனையடுத்து, 1754 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 05ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks