பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
சபையின் மரியாதையினை பேணல் தொடர்பிலான தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.02.01 முதல் 2017.02.28 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள்
(ii) 1987 செப்டம்பர் 14 ஆம் திகதிய 471/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கம்பனிகள் (செயலாளர்கள் பற்றிய) ஒழுங்குவிதிகளின் 2 (i)(ஆ) பிரிவு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 527 ஆம் பிரிவின் கீழ் திருத்தப்பட்டு, (ix) எனும் புதிய உப பிரிவைச் சேர்த்து, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 20 ஆம் திகதிய 1998/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனி
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணைகள்
பிரதம அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றிற்காக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் வேறு சேவைகளில் ஈடுபடுதலைத் தவிர்த்து வைத்தியத் துறையில் சேவையாற்றும் வாய்ப்பை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1726 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஏப்ரல் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks