பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயல் மதிப்பீட்டு அறிக்கைகள்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 நவெம்பர் 11 ஆம் திகதிய 1992/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக கௌரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்கள் சார்பாக கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ டபிள்யூ. டீ. ஜே. செனெவிரத்ன
(ii) கௌரவ ஏ. எச். எம். பெளஸி
(iii) கௌரவ மனுஷ நாணாயக்கார
(iv) கௌரவ அஜித் மான்னப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமை
தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன அவர்களால் 2016 திசெம்பர் மாதம் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரந்தாய் கிராமத்திலுள்ள காணியில் மக்களை மீள குடியமர்த்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜனவரி 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks