பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன அமைச்சு
(v) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸ் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ நிஹால் கலப்பத்தி
(ii) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
(iii) கௌரவ அஜித் மான்னப்பெரும - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மாற்றுத் திறனைக் கொண்ட இராணுவ சிப்பாய்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு மற்றும் சுற்றுலாத்துறைக்காக ஹமில்டன் கால்வாய் அபிவிருத்தித் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசோக்க பிரியந்த அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1900 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2016 நவம்பர் 15ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2017]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks