பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,
(iv) இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 1979/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தினைத் தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2016 யூலை 01 ஆம் திகதிய 1973/76 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான தொலைத் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சர்வதேச தொடர்புகள்
(ii) தேசியப் பாதுகாப்பு
பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ், சமர்ப்பிக்கப்படும் “இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
அம்பாறை மாவட்டத்தில் திம்பிரிகொல்ல, வட்டமடுவில் சுமார் 1000 ஏக்கர் அளவு வனப் பிரதேசத்தை சட்டவிரோதமாக அழித்தல் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பதில் நிதி அமைச்சர் கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன அவர்கள் “சோ்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பெருந்தோட்டத் துறை ஊழியர்களுக்கான தினசரி ஊதியத்தை அதிகரித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஒக்டோபர் 06ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks