பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான பேராதெனிய தாவரவியல் பூங்கா பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(ii) 2010, 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவு மற்றும் (3) ஆம் உப பிரிவின் கீழான துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016 சனவரி 01 ஆம் திகதிய 1947/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்ட (52 ஆம் அத்தியாயம்) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஈதைல் மதுசாரம் தொடர்பில் மது வரியினைத் திருத்தியமைத்தல் மற்றும் ஈதைல் மதுசார இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 மார்ச்சு 02 ஆந் திகதிய 1956/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சமல் ராஜபக்ஷ
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - 3 மனுக்கள்
(iii) கௌரவ அஜித் மான்னப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் படையினரைக் குறைத்தல்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு “ரஞ்சன் ராமநாயக்க பவுண்டேஷன் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு “குல்லியத்துல் இமாம் சாபிஈ அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(iii) கெளரவ முஹமட் நவவி அவர்களுக்கு “நிடா மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலஞ்சம் அல்லது ஊழலை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பணிகளில் திருப்தியின்மை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஏப்ரல் 07ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks