பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தலகள் விடுக்கப்பட்டன-
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘B’ : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
சமர்ப்பித்தார்.
இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2015
(iv) 2012 ஆண்டுக்கான இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய - மூன்று மனுக்கள்
(ii) கெளரவ விஜித் விஜயமுணி சொய்சா - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ தயாசிறி ஜயசேகர - இரண்டு மனுக்கள்
(iv) கெளரவ பியங்கர ஜயரத்ன
(v) கெளரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன
(vi) கெளரவ அசோக் அபேசிங்க - மூன்று மனுக்கள்
(vii) கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா - நான்கு மனுக்கள்
(viii) கெளரவ கனக ஹேரத்
(ix) கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசடைதல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை கிரிக்கட் சபையின் முறைகேடுகள் தொடர்பாக ஒரு விசாரணை அறிக்கை பற்றிய கூற்றினை விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா அவர்களுக்கு “சந்திரகுமார் சமூகமேம்பாட்டு மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட இருபத்திநான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2016, 109 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2016' பிரிவுக்கு விஜயம் செய்க.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 21 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iv) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(v) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vi) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(vii) துறைசார் மேற்பார்வைக் குழு - திருத்தங்களுடன்
(viii) அரசாங்க நிதி பற்றிய குழு - திருத்தங்களுடன்
(ix) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் பன்னிரண்டு தீர்மானங்கள் (வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது ஆதரவாக 156 வாக்குகளுடன் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது)
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2016 ஜனவரி 09ஆந் திகதி சனிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks