பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது-
‘A’ : கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க பா.உ., அவர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
சமர்ப்பித்தார்.
இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ பி. ஹரிசன் - இரண்டு மனுக்கள்
(ii) கெளரவ கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ விமலவீர திசாநாயக்க
(iv) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(v) கெளரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(vi) கௌரவ அஜித் மான்னப்பெரும - மூன்று மனுக்கள்
(vii) கௌரவ சந்தித் சமரசிங்க - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
வேரஸ் ஆற்று மழை நீர் வடிகாலமைப்புத் திட்டம் காரணமாக நியாயமற்ற முறையில் காணி கைப்பற்றலினால் 2000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பானது
சிறப்புரிமை
தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் 2015 திசெம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ ரொசான் ரணசிங்க அவர்களுக்கு “இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்களுக்கு “தொல்பொருட்களை பாதுகாக்கும் ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(iii) கெளரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களுக்கு “கொடசர பியங்கல ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
கெளரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்கு பின்வரும் இரு கூட்டிணைத்தல் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iv) ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பு
(v) அத்தரகல்ல ஐக்கிய பிரஜைகளுக்கான அபிவிருத்தி அமைப்பு
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே புத்தசாசன அமைச்சர் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 16ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks