E   |   සි   |  

2015 டிசம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2013 மற்றும் 2014 ஆண்டுகளுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார - மூன்று மனுக்கள்
(ii) கெளரவ அஜித் பி. பெரேரா - பதினான்கு மனுக்கள்
(iii) கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி                     
(iv) கெளரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) – குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 14ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks