E   |   සි   |  

2015 டிசம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

‘A’ : பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் நியமனம்
‘B’ : சபரகமுவ மாகாண சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தி


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ விஜித ஹேரத் - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன                   
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

தமிழ் அரசியற் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படல் தொடர்பானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ ஜானக வக்கும்புர அவர்களுக்கு “ரொசான் ரணசிங்க ஜனசஹன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) ஸ்ரீ லங்கா ஹிரா பௌன்டேஷன் (கூட்டிணைத்தல்)
(iii) அல்மனார் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(iv) ஹிஸ்புல்லாஹ் மன்ற (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (ii) மற்றும் (iv) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் மற்றும் சட்டமூலம் (iii) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2016) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 03ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks