E   |   සි   |  

2015 நவம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’ : பொதுமனுக் குழுவிலிருந்து கேட்டுவிலகிய உறுப்பினருக்குப் பதிலாக புதிய உறுப்பினரின் நியமனம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிச் சபையினது ஆண்டறிக்கை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 35; எதிராக 03) திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


இதனையடுத்து, 1850 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2015 நவம்பர் 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks