E   |   සි   |  

2015 நவம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2015.11.03 அன்று பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிய பாதுகாப்பு தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் வினவிய யாழ் குடாநாட்டில் வளர்கின்ற பல்வேறு வகையான காய்கறிகளுக்கு போதிய சந்தை வசதியின்மை சம்பந்தமாக கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.


அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

125 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபத்துநான்கு (24) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

பொது முயற்சிகள் பற்றிய குழு

126 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் பொது முயற்சிகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபத்துநான்கு (24) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

பொது மனுக்கள் பற்றிய குழு

128 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் பொது மனுக்கள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் இருபது (20) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களுக்கு “1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, இலங்கை ஆளணி முகாமை நிறுவகச் சட்டத்தை (திருத்தம்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“‘எவன்ட் காட்’ சம்பவம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 நவம்பர் 05ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks