E   |   සි   |  

2015 ஒக்டோபர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவன்ட்காட் பிரச்சினை தொடர்பான கூற்றினை சபையில் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அலி ஸாஹிர் மௌலானா செயிட் அவர்களுக்கு “அல்ஹசன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பதினேழு கட்டளைகள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1856 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 22ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks