E   |   සි   |  

2015 செப்டெம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(i) 2014 திசெம்பர் 2 ஆந் திகதிய 1891/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2014 திசெம்பர் 12 ஆந் திகதிய 1892/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2014 திசெம்பர் 31 ஆந் திகதிய 1895/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(iv) 2015 சனவரி 22 ஆந் திகதிய 1898/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) 2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vi) 2015 பெப்புருவரி 14 ஆந் திகதிய 1901/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vii) 2015 பெப்புருவரி 24 ஆந் திகதிய 1903/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(viii) 2015 மாச்சு 17 ஆந் திகதிய 1906/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(ix) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம்.
(2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(x) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம்.
(2015 பெப்புருவரி 26 ஆந் திகதிய 1903/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(xi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்புருவரி 26 ஆம் திகதிய 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

(xii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்புருவரி 26 ஆந் திகதிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.

(xiii) காலத்திற்குக் காலம்  திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுபானம் மற்றும் பியர் உற்பத்தியாளர்கள் மாதமொன்றுக்கு குறைந்த பட்ச மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(973 ஆம் இலக்க மது அறிவித்தல்)

(xiv) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும்  2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.

(xv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக 2014 ஏப்பிறல் மாதம்  3 ஆம்  திகதி செய்துகொள்ளப்பட்ட  உடன்படிக்கை.


பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

124 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.

சபாநாயகரின் அறிவித்தல்

சபையின் அனுமதியுடன், கௌரவ சபாநாயகர் பின்வரும் உறுப்பினர்களை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிற்கு நியமித்தார்-

கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
கௌரவ ரவி கருணாநாயக்க
கௌரவ றிஸாட் பதியுதீன்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ
கௌரவ மனோ  கணேசன்
கௌரவ அஜித் பி. பெரேரா
கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவிற்கான தனது அண்மைய அரச விஜயம் பற்றிய கூற்றினை சபையில் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள்

ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks