01

E   |   සි   |  

 திகதி: 2018-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0493/2018: Recruitment of Employees to and Benefits from Divinaguma Community Banks

493/ 18

கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) பதுளை மாவட்டத்தில் இயங்கும் திவிநெகும சமூக மைய வங்கிகளின் (சமுர்த்தி வங்கிகள்) எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி வங்கிகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

(iii) ஒவ்வொரு வங்கிக் கிளையிலிருந்தும் அனுகூலங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கியிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் பெயர்கள், பதவிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(ii) தற்போது மேற்படி வங்கிகளில் ஊழியர் வெற்றிடங்கள் உள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி வெற்றிடங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks