01

E   |   සි   |  

 திகதி: 2018-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0492/2018: Oil Tanks leased in Trincomalee

492/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை துறைமுகத்தைச் சார்ந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெய் தாங்கிகள் இருக்கின்றனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெயத் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகள் யாவை என்பதையும்;

(v) தற்போதைய நல்லாட்சி அரசு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அந்த எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட வருமானத்தை ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks