01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0482/2018: Reinstating approval given to filling 10 perches of paddy lands each for building houses

1755/ '17

கௌரவ லக்கி ஜயவர்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்குதல் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்தென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) தற்போது மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இழக்கச் செய்யப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆகையால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் காணியில்லாத பெரும் தொகையான மக்கள் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்புவதற்காக இன்றளவில் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆட்களுக்கு மிகத் துரிதமாக மேற்படி10 பர்சஸ் வயல் காணியை நிரப்பிக்கொள்ள வாய்ப்பளிப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks