01

E   |   සි   |  

 திகதி: 2010-08-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0402/2010: plants

0402/ ‘10

கெளரவ தாராநாத் பஸ்நாயக்க ,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தாவர இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    இவற்றில் நீரியல் ஆக்கிரமிப்புத் தாவர இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) நீரியல் ஆக்கிரமிப்புத் தாவர இனங்களின் துரித வளர்ச்சி மற்றும் பரவுதலானது நீர் வழிந்தோடக்கூடிய வழிகளை அடைக்கவும் உடனடி வெள்ளப் பெருக்கு ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

(இ) (i) மேற்படி நீர் சார்ந்த ஆக்கிரமிப்புத் தாவர இனங்களை அழிப்பதற்கு அல்லது அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு முறையான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்,

(ii) அவ்வாறெனில், அது யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-20

கேட்டவர்

கௌரவ தாராநாத் பஸ்நாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks