01

E   |   සි   |  

 திகதி: 2016-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0978/2016: Substandard fuel purchased by Magampura Port Management Company in 2014

978/ '16

கௌரவ அநுர திசாநாயக்க,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வரையறுக்கப்பட்ட மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் கம்பனியின் கீழ் (MPMC) கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்ற எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை யாது;

(ii) தாங்கியொன்றின் கொள்ளளவு மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வகைக்கிணங்க வெவ்வேறாக யாது;

(iii) 2014 யூலை மாதத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விவரக்கூற்றுகளுடன் பொருந்தாமையினால் நிராகரிக்கப்பட்ட MGO வகையைச் சேர்ந்த 7,400 மெட்றிக் தொன் எரிபொருளை மேற்படி கம்பனி கொள்வனவு செய்துள்ளதா;

(iv) மேற்படி எரிபொருள் மெட்றிக் தொன் ஒன்றுக்கான விலை யாது;

(v) கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்ட இந்த எரிபொருளை கொள்வனவு செய்ய கம்பனிக்கு அங்கீகாரம் வழங்கியவர்கள் யாவர்;

(vi) 2014 திசெம்பர், 2015 சனவரி மற்றும் பெப்ருவரி மாதங்களில் இந்த எரிபொருள் மெட்றிக் தொன் ஒன்றுக்கான விற்பனை விலைகள் வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சந்தையின் விலைத் தளம்பலை பொருட்படுத்தாமல் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தியமையால் கம்பனிக்கு நேர்ந்துள்ள நட்டம் வெவ்வேறாக எவ்வளவு;

(ii) இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) 2014.12.03 ஆந் திகதி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பிரதிப் பொது முகாமையாளரின் (Bunkering) மாதாந்த சம்பளம், செயற்பொறுப்பு மற்றும் சனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்படி சட்டவிரோதமான நியமனத்தை வழங்கியமைக்கான காரணம் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks