01

E   |   සි   |  

 திகதி: 2017-01-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0902/2017: அரசியல் பழிவாங்கலுக்குள்ளான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள்: நிவாரணம்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகியுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய அரசாங்கத்தின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அல்லது வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், மேற்படி குழு நியமிக்கப்பட்டு அல்லது வேலைத்திட்டமொன்று தயாரிக்கபட்டு இருப்பது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழா; ஆமெனில், மேற்படி அங்கீகாரம் பெறப்பட்ட திகதி யாது;

(iii) அரசியல் பழிவாங்கல்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கவனத்திற் கொள்ளப்படும் கால எல்லை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் யாது;

(ii) அவ்வாறு பழிவாங்கலுக்கு ஆளாகி, நிவாரணங்கள் பெற்று, பதவியுயர்வு பெற்றுள்ளவர்களின் பெயர், பழிவாங்கலுக்கான காரணம் மற்றும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் தனித்தனியாக யாது;

(iii) இவர்களுக்கு பதவியுயர்வோடு நிலுவைச் சம்பளம் வழங்கப்படுகின்றதா;

(iv) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-25

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks