01

E   |   සි   |  

 திகதி: 2016-08-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0660/2016: Students of Provincial Council schools facing physical and mental harassment

660/ '16

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மாகாண சபைகளின் கீழ் இயங்கிவருகின்ற பாடசாலைகளின் ஒருசில அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவமாணவிகள் பல்வேறு அநீதிகளுக்கும் உடல் மற்றும் உளரீதியான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனரென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) இன்றளவில் அவ்விதமாக உள மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு இலக்காகிய மாணவமாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கு ஏற்ப வெவ்வேறாக எவ்வளவு;

(ii) உள மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களைத் தடுக்கவும் அவர்களின் ஒழுக்கம் நிறைந்த நடத்தைகள் பற்றியும் மாகாண முதலமைச்சருக்கு விழிப்புணர்வூட்டி அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks