01

E   |   සි   |  

 திகதி: 2014-09-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

4958/2014: Provincial Hospitals and Staff - Puttlam District

4958/ ’14

கெளரவ நிரோஷன் பெரேரா,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வடமேல் மாகாண சபையினால் நிருவகிக்கப்படும் புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

           (ii)     இந்த வைத்தியசாலைகளில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிகிச்சை பெற்றுள்ள வெளிநோயாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் மேலே அ(i) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், தாதிமார், சுகாதார கவனிப்பாளர்கள் வைத்தியசாலைத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பணியாட் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) இவ் வைத்தியசாலைகளில் தற்போது இப்பதவிகளுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்

அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) மேலே ஆ(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-11

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks