01

E   |   සි   |  

 திகதி: 2014-10-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

4085/2014: National Institute of Language Education and Training-Kalutara

4085/ ’13

கௌரவ புத்திக பதிரண,— தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் கலேவத்த பிரதேசத்தில் பேணிவரப்படுகின்ற தேசிய மொழிக்கற்கை மற்றும் பயிற்சி நிறுவகத்திற்கு (NILET) இற்றைக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் பணிப்பாளரொருவர் நியமிக்கப்பட்டுள்ளாரென்பதை அறிவாரா;

(ii) அப்பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டனவா;

(iii) ஆமெனில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட  திகதி யாது;

(iv) கிடைத்த மொத்த விண்ணப்பப் பத்திரங்களின் எண்ணிக்கை யாது;

(v) சம்பந்தப்பட்ட பதவிக்காக விண்ணப்பப் பத்திரங்களை அனுப்பிவைத்த விண்ணப்பதாரிகளில் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் பெயர், முகவரி, வயது, கல்வி மற்றும் பிற விசேட தகைமைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) தற்போதைய பணிப்பாளரை விட உயர் தகைமைகளைக் கொண்டவர்கள் மேற்படி பதவிக்கு ஆட்சேர்க்கப்படுவதற்கான நேர்முகப் பரீட்சையில் பங்கேற்றனரென்பதை அறிவாரா;

(ii) உயர் தகைமைகளைக் கொண்டவர்கள் இருக்கும் போது  குறைந்த தகைமைகளைக் கொண்ட ஒருவர் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-30

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-10-30

பதில் அளித்தார்

கௌரவ பழனி திகாம்பரம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks