பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2508/2026: Need of a National Drainage map to minimize Flood situations

2508/2026
கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையின் பிரதான முகத்துவாரங்கள் மற்றும் நீர்வடிகாலமைப்புகள் தற்போதைய காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்ற அதிக மழைவீழ்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்குப் போதுமான திறனைக் கொண்டதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) வெள்ளக் கட்டுப்பாட்டிற்காக நீரானது சீராகவும் வேகமாகவும் கடலுக்கு வழிந்தோடக்கூடிய வகையில் நீர்வடிகாலமைப்புகளை புதுப்பிக்கும் வேலைத்திட்டமெதுவும் உள்ளதா என்பதையும்;
(iii) இலங்கையின் பிரதான நீரேந்துப் பிரதேசங்கள் மற்றும் நீர்வடிகால் வழிகளை உள்ளடக்கிய நவீன அறிவியல் ரீதியான 'தேசிய நீர்வடிகால் வரைபடம்' ஒன்றைத் தயாரித்தல், முகத்துவாரங்களில் காணப்படும் தடைகளை அகற்றுதல், அதிக மழைவீழ்ச்சிக் காலங்களிலும் நீரானது திறம்பட வழிந்தோடக்கூடிய வகையில் பாரியளவிலான நீர்வடிகால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் எதிர்கால வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காகப் புவியியல் மற்றும் நீரியல் தரவுகளின் அடிப்படையிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவென்பதையும்;
(v) அதற்காக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-20

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks