E   |   සි   |  

 திகதி: 2026-11-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2505/2026: Function of schools in Balapitiya Educational Zone

2505/2026
கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தென்மாகாணத்தில், காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பலபிட்டிய கல்விக் கோட்டத்தில் இயங்குகின்ற அரச பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி கல்விக் கோட்டத்தினுள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி பாடசாலைகள் மூடப்படுவதற்கான காரணிகள் யாவையென்பதையும்;
(iv) கோட்டத்தினுள் 1981 ஆம் ஆண்டின் 65ஆம் இலக்க உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற அல்லது மேற்படி சட்டத்திற்கு உட்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மூடப்பட்டுள்ள அல்லது மாணவர்கள் இல்லாதபடியால் இயங்காத நிலையில் உள்ள பாடசாலைகள் வசமுள்ள கட்டடங்களையும், காணிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களையும் சமுதாயக் கல்வி நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி போன்ற பயனுறுதி வாய்ந்த பொது நோக்கங்களுக்காக ஈடுபடுத்துவதற்கு அமைச்சின் வசமுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(ii) மேற்படி அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-19

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks