E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1460/ 2025 - கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1460/2025
      கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தச்) சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை மின்சார சபையினை மறுசீரமைக்கும் செயன்முறையின் போது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு கோரியுள்ள இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவி வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
      (ii) சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு கோரவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (iii) சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறவுள்ள ஊழியர்களுக்கு இழப்பீடுகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
      (iv) மேற்படி நிதியை பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி மூலங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks