E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1451/ 2025 - கௌரவ கே.இளங்குமரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1451/2025
      கௌரவ கே. இளங்குமரன்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் பெருமளவு தாமதம் காணப்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (ii) இதன் விளைவாக, அவசரத் தேவைகள் ஏற்படும் போது அவர்களுக்கு விமானப் பயணங்களில் ஈடுபட முடியாதுள்ளமை பற்றி அறிவாரா என்பதையும்;
      (iii) இத்தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நட்ட ஈடு அல்லது முன்னுரிமை வழங்கப்படுமா என்பதையும்;
      (iv) மேற்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பான செயன்முறையை துரிதமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும்;
      (v) தாமதங்களைக் குறைப்பதற்கு டிஜிட்டல் அல்லது உயிர் புள்ளியியல் (பயோமெற்றிக்) முறைகள் மீது கவனம் செலுத்தப்படுமா என்பதையும்;
      (vi) துரித சேவையை வழங்குவது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறானது என்பதையும்;
      (vii) இலங்கையர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் நடமாடும் சேவைகள் அல்லது நேரடி சேவைகள் அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா;
      (ஆ) (i) அவசர வழக்கு நடவடிக்கைகளுக்கு இலங்கை தூதரகங்களில் விசேட பிரிவுகள் நிறுவப்படுமா என்பதையும்;
      (ii) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-14

கேட்டவர்

கௌரவ கே.இளங்குமரன், பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks