E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1352/ 2025 - கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1352/2025
      கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும், சட்டவிரோத மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிவாரா;
      (ii) ஆமெனில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      (iii) அதற்கான கண்காணிப்பு மற்றும் அமுலாக்கல் நடவடிக்கைகளை வலுவூட்ட எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டம் யாது;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) மேற்படி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் —
      (i) காரணமாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீன்பிடி உற்பத்தியின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தாக்கம் யாது;
      (ii) இதன் காரணமாக மேற்படி மாவட்டங்களில் மீனவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
      (iii) மேற்படி விடயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வருமானத்தையும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      (iv) இவ்விடயத்தைக் கட்டுப்படுத்துவதற்கு போதியளவில் சட்டம் அமுல்படுத்தப் படாமைக்கான காரணங்கள் யாவை;
      (v) இதனைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை பொலிசாருக்கிடையில் சிறந்ததொரு ஒருங்கிணைப்பு பேணிவரப்படுகின்றதா;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-13

கேட்டவர்

கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks