E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1350/ 2025 - கௌரவ இம்ரான் மகரூப், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1350/2025
      கௌரவ இம்ரான் மகரூப்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற திருகோணமலை மாவட்டத்தின் வீதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன என்பதையும்;
      (ii) கிண்ணியா பிரதேசத்தின் சனத்தொகை மற்றும் அப்பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைவாக, கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியை முன்னுரிமை வழங்கி விஸ்தரிக்க வேண்டும் என்பதையும்;
      (iii) மேற்படி வீதிக்கு அருகே பாடசாலைகள் அமைந்துள்ளதுடன், அதிக வாகன நொிசல் நிலவுவதையும், பாதசாரிகளுக்குப் போதுமான வசதிகள் இல்லை என்பதையும்;
      அவர் ஏற்றுக் கொள்வாரா?
      (ஆ) (i) கிண்ணியா – கொழும்பு பிரதான வீதியின் அகலம் யாது;
      (ii) மேற்படி வீதி ஒரே திசையில் மாத்திரம் வாகனம் பயணம் செய்யக்கூடிய ஒருவழிப் பாதையா;
      (iii) இன்றேல், இரு திசைகளிலும் வாகனம் பயணம் செய்யக்கூடிய இருவழிப் பாதையா;
      (iv) மேற்படி வீதியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா;
      (v) ஆமெனில், உத்தேச வீதியின் நீளம் மற்றும் அகலம் யாது;
      (vi) அதற்கென மதிப்பீடு செய்யப்பட்டுள்ள செலவினம் எவ்வளவு;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-13

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks