E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1283/ 2025 - கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1283/2025
      கௌரவ தனுஷ்க ரங்கனாத்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) ஒரு இலட்சம் கிலோமீட்டர் மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீதிகள் யாவையென்பதையும்;
      (ii) அவற்றுள் இன்றளவில் அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள மற்றும் நிறைவு செய்யப்படாத வீதிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
      (iii) அத்தகைய வீதி ஒவ்வொன்றுக்குமென செலவிடப்பட்டுள்ள மொத்த செலவுத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iv) அத்தகைய வீதி ஒவ்வொன்றினது அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படாத வீதிகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (ii) அத்தகைய வீதிகள் தொடர்பாக எடுக்கவிருக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iv) அத்தகைய வீதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப் படுகின்றனவா என்பதையும்;
      (v) மேற்படி வேலைத்திட்டத்திற்காக வேறு நிறுவனங்களுக்கு கையகப்படுத்தப்பட்ட வீதிகள் மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks